திரைப்பட மேதை சத்யஜித் ராய் பிறந்ததினம்! - Seithipunal
Seithipunal


உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை திரு.சத்யஜித் ராய் அவர்கள் பிறந்ததினம்!.

 சத்யஜித் ராய் (Satyajit Ray, மே 2, 1921 - ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார்.

  வணிகம் கலைஞராக கலைத்துறையில் அறிமுகமானாலும், இலண்டனில் பைசைக்கிள் தீவ்சு (1948) என்ற இத்தாலிய படத்தை பார்க்கும் போது பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான சீன் ரேனோயர் மூலம் வணிக நிறுவனம் மூலம் அல்லாத தனி நபர் திரைப்படத் தயாரிப்புக்கு ஆர்வமானார். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.

ஆக்ஸ்போர்டு பலகலைக்கழகம் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992இல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. 1992இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Film maestro Satyajit Ray celebrates his birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->