முதல் நாளிலேயே வசூலை வாரி குவித்த ரெட்ரோ - எவ்வளவு தெரியுமா?
retro movie collection update
தென்னிந்திய நடிகர் சூர்யாவின் 44-வது படம் 'ரெட்ரோ'. இந்தப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவலை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, ரெட்ரோ திரைப்படம் முதல்நாளில் உலகமெங்கும் 46 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை, நாளை மறுதினம் வார விடுமுறை என்பதால் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்ரோ படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
English Summary
retro movie collection update