சாலை வசதி இல்லை: கர்ப்பிணியை டோலி கட்டி தூக்கி வந்த குடும்பத்தினர்: வழியில் குழந்தை பிறந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ரெகபுனகிரி மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் இங்குள்ள பழங்குடியின மக்கள் சுமார் 03 கிமீ தூரமுள்ள எஸ்.கோட்டா அரசு மருத்துவமனை மற்றும், நகர்ப்புற பகுதிக்கு வருவதற்கு மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக மருத்துவமனைக்கு அவசர உதவிக்காக கர்ப்பிணிகள், முதியவர்கள், விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை இன்னும் உள்ளது.

இந்நிலையில் நேற்று குறித்த மலைக்கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய பங்கி சீதம்மா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கு சாலை வசதி இல்லாத காரணத்தினால் அவரது கணவர் நரசிங்கராவ் மற்றும் அப்பகுதி மக்கள், டோலி கட்டி அவரை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.


அதாவது, கரடுமுரடான மலைப்பாதை வழியாக டோலியில் தூக்கி செல்லும்போது திடீரென நடுவழியிலேயே அந்த கர்ப்பிணிக்கு பிரசவம் ஏற்பட்டுள்ளதில், பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய், குழந்தையை டோலியிலேயே எடுத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலை, சந்திரபாபுநாயுடு தலைமையிலான கூட்டணி அரசு ஏற்பட்ட பிறகு ரெகபுனகிரி கிராமத்திற்கு சாலை அமைக்க ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சாலைப்பணிகளை விரைவுபடுத்துமாறு ரெகபுனகிரி மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Due to the lack of road facilities a family carrying a pregnant woman on a dolly has suffered a miscarriage on the way


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->