சூப்பர் நியூஸ் மக்களே!!! வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள்...! - தெற்கு ரயில்வே
4 additional coaches Vande Bharat train Southern Railway
வந்தே பாரத் ரெயில் சேவை, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், திண்டுக்கல், கோவில்பட்டி,விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

மேலும் இந்த சேவை தொடங்கப்பட்டபோது 8 பெட்டிகள் மட்டுமே இருந்த நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 16 பெட்டிகளாக அதன் பிறகு மாற்றப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக, கூட்ட நெரிசலை தவிர்க்க எழும்பூர்-நாகர்கோவில் இடையில் இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது.
இது தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வரும் நிலையில் 4 பெட்டிகள் இணைத்து மொத்தம் 20 பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.இது வரும் 8-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என 'தெற்கு ரெயில்வே' வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
4 additional coaches Vande Bharat train Southern Railway