தாலி அணிவது பெண்களின் விருப்பம்! பெண்களுக்கு தாலி கட்டாயமில்லை.. – சின்மயி கணவரின் சர்ச்சை பேச்சு!
Wearing a thali is a women choice It is not mandatory for women to wear a thali Chinmayi husband controversial statement
பாடகி சின்மயியின் கணவரும், நடிகரும், இயக்குநருமான ராகுல் ரவீந்திரன் சமீபத்தில் தாலி அணிவது குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகராக தெலுங்கில் “அந்தல ராக்ஷசி” படத்தின் மூலம் அறிமுகமான ராகுல் ரவீந்திரன், பின்னர் தமிழில் சமந்தா நடித்த “மாஸ்கோவின் காவேரி” படத்தில் நடித்தார். அதன் பிறகு பாலிவுட்டில் “ஜிக்ரா” என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவரை பற்றி நடிகை சமந்தா ஒரு பேட்டியில், “நான் மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டபோது, தினமும் காலை மாலை வந்து என்னை ஆற்றுப்படுத்தினார். அவர் எனக்கு நண்பர் மட்டுமல்ல, என் குடும்பத்தில் ஒருவர்” என்று உணர்ச்சியுடன் பேசியிருந்தார்.
இப்போது ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள புதிய படம் “The Girlfriend” ராஷ்மிகா மந்தனா நடித்ததில், நவம்பர் 7 அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் ராகுல் ரவீந்திரன், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவி சின்மயிடம்,“தாலி அணிவது உன் விருப்பம். நான் அதை அணியக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஏனென்றால் ஆண்களுக்கு திருமணமானதற்கான வெளிப்படையான அடையாளம் எதுவும் இல்லை. ஆனால் பெண்களுக்கு மட்டும் இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்?”என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. பலர் இதை ஆதரித்து, “இது சமத்துவத்தைக் குறிக்கும் பாராட்டத்தக்க எண்ணம்” என்று கூறுகின்றனர்.
அதே நேரத்தில் சிலர்,“மங்கல சூத்திரம் அணிவது ஒரு கலாச்சார மரபு. அது சமூகத்தின் அடையாளமாகும். அதனை மறுப்பது சரியல்ல”
என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் சமூக வலைதளங்களில் ராகுல் ரவீந்திரனின் கருத்தை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இரண்டு பிரிவாக விவாதங்கள் வெடித்து வருகின்றன.
திரைப்பட உலகிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த கருத்து, தற்போது திருமண சின்னங்களின் அர்த்தம் மற்றும் பெண்களின் சுதந்திரம் குறித்து புதிய விவாதத்துக்குத் துவக்கமாகியுள்ளது.
English Summary
Wearing a thali is a women choice It is not mandatory for women to wear a thali Chinmayi husband controversial statement