மோடி ஏன் மௌனம்...? டிரம்ப் தொடர்பு விவகாரத்தில் காங்கிரஸ் சரமாரியாக கேட்ட கேள்வி...! - Seithipunal
Seithipunal


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது நான் தான்” என்கிற சர்ச்சைக்குரிய கருத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார்.இதை இந்திய அரசு திடீரென மறுத்து, எந்தவித தலையீடும் அமெரிக்காவிடமிருந்து இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின், சமீபத்தில் அளித்த பேட்டியில், “வர்த்தகம் மற்றும் பிற இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து, டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்று கூறியிருந்தார்.

இந்த கருத்து வெளிவந்ததும், இந்திய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.இதற்கு எதிராக, காங்கிரஸ் கட்சி, தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளதாவது,"டொனால்ட் டிரம்ப் மற்றும் நரேந்திர மோடி இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருவதாக வெள்ளை மாளிகை தானே உறுதி செய்துள்ளது.

அப்படியிருக்க, டிரம்ப் உடன் பேசினேன் என்று மோடி ஏன் ஒப்புக்கொள்வதில்லை?அவர் எதற்கு மௌனம் காத்திருக்கிறார்?எதற்காக பயப்படுகிறார்?”.இந்த சர்ச்சை தற்போது சர்வதேச அளவில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why is Modi silent Congress asked series questions Trump contact issue


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->