ராகுல் காந்தியின் ‘H FILES’...! வாக்கு திருட்டின் ஹைட்ரஜன் குண்டு இன்று வெடிக்கிறது...!
Rahul Gandhis H FILES hydrogen bomb vote theft explodes today
கடந்த செப்டம்பர் மாதம், கர்நாடக மாநிலத்தின் ஆலந்து தொகுதியில் சுமார் 6,000 வாக்குகள் போலியாக நீக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.அந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்து, வாக்கு மோசடி குறித்த மூல ஆதாரங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

அப்போது அவர்,“இந்த வாக்கு திருட்டின் பின்னால் இருக்கும் யதார்த்த நிலையை வெளிச்சம் போடும் ஹைட்ரஜன் குண்டை விரைவில் வெடிக்கவிருக்கிறோம்,”என்று எச்சரிக்கையாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘THE H FILES’ எனும் தலைப்பில் இன்று பகல் 12 மணிக்கு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
அந்த சந்திப்பில், வாக்கு திருட்டு விவகாரம் குறித்த முக்கிய ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் பெயர்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அரசியல் வட்டாரங்கள் முழுவதும் பெரும் பதற்றமும் ஆர்வமும் நிலவுகிறது.
English Summary
Rahul Gandhis H FILES hydrogen bomb vote theft explodes today