திருவள்ளூரில் கொலை அதிர்ச்சி...! - சரித்திர குற்றவாளி நவீன் கொலைக்கு காவலர்கள் வேட்டை...!
Murder shock Thiruvallur Police hunt murder historical criminal Naveen
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியிருந்த இவர், சரித்திர பதிவேடு குற்றவாளி எனக் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
நவீன் மீது கொலை முயற்சி, தாக்குதல், அச்சுறுத்தல் உள்ளிட்ட வழக்குகள் மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் இருந்தன.

இந்நிலையில், நேற்று இரவு மணவாளநகர் அருகே எம்.ஜி.ஆர். நகர் ஏரிக்கரையில் நவீன் தனியாக நின்றுகொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென அங்கு வந்த இருவர், அவரை நோக்கி அடி, வெட்டு தாக்குதல் நடத்தினர். பின்னர், அவரது தலையில் கல்லை அடித்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கடுமையான காயங்களால் நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மணவாளநகர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நவீனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரையும் அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Murder shock Thiruvallur Police hunt murder historical criminal Naveen