இந்தியாவுக்கு முதலீடு செய்ய அழைப்பு...! - நியூசிலாந்து தொழிலதிபர்களை சந்தித்த பியூஷ் கோயல்...!
invitation invest India Piyush Goyal meets New Zealand businessmen
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அரசு முறைப்பயணமாக இன்று நியூசிலாந்து சென்றுள்ளார்.வெலிங்டன் விமான நிலையத்தில் அவரை அந்நாட்டு வர்த்தக அமைச்சர் டெட் மெக்கிலே மரியாதையுடன் வரவேற்றார். இருநாட்டு தேசிய கொடிகள் அலங்கரித்த மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில், இரு தரப்பினரும் நட்பு கைபிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த பயணத்தின் போது, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) குறித்து இருநாட்டு அமைச்சர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதனுடன், இருநாட்டு பொருளாதார உறவு, தொழில்துறை வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்களும் விவாதிக்கப்பட உள்ளன.
மேலும், பியூஷ் கோயல் நியூசிலாந்து தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இந்தியாவின் வேகமான வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உற்பத்தித் திறன் ஆகியவற்றை விளக்கி, “இந்தியாவில் முதலீடு செய்ய இது தங்க வாய்ப்பு” என அவர் வலியுறுத்த உள்ளார்.
அவரது பயணத்தால், இந்தியா–நியூசிலாந்து வர்த்தக உறவு மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
English Summary
invitation invest India Piyush Goyal meets New Zealand businessmen