விஜய் - சங்கீதா விவகாரத்தில் அடுத்த அதிரடி! 'நீலாங்கரை வீட்டில் எனக்கு உரிமை உண்டு'...! - நீதிமன்றத்தில் புதிய மனு
Next move Vijay Sangeeta case I have rights Neelankarai house New petition court
திரையுலக உச்சநட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்து விவாகரத்து கோரி, அவரது மனைவி சங்கீதா கடந்த மாதம் 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ததாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

அந்த மனுவில் விஜய் மீது அவர் அடுக்கடுக்கான அதிரடிப் புகார்களைப் பட்டியலிட்டிருந்தது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது சங்கீதா அதே நீதிமன்றத்தில் மற்றுமொரு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், தனக்கு நீலாங்கரை இல்லத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால் சென்னையில் தங்குவதற்கு இடமின்றித் தவிப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து நடைமுறைகள் முடிந்து தான் வேறு இடத்திற்கு மாறும் வரை அந்த இல்லத்திலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், விஜய்க்குச் சொந்தமான அந்த வீட்டில் தனக்கும் சரிபாதி உரிமை உள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
மேலும், நீலாங்கரை இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையைக் கோரினால், விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் மூலம் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் அந்தப் புதிய மனுவில் சங்கீதா பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
English Summary
Next move Vijay Sangeeta case I have rights Neelankarai house New petition court