அல்லு சிரிஷ் - நைனிகா ரெட்டி கல்யாண கலாட்டாவில் சூர்யா ! - ஐதராபாத்தில் திரண்ட திரைப்பிரபலங்கள்!.
surya attend Allu Sirish Nainika Reddy wedding Celebrities gather Hyderabad
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ் நேற்று ஐதராபாத்தில் இல்லற வாழ்வில் இணைந்தார். மணப்பெண் நைனிகா ரெட்டிக்கும், அல்லு சிரிஷுக்கும் இரு வீட்டாரின் பெரியோர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் முன்னிலையில் மிக விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.

திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத் திருமண விழா, மிக நேர்த்தியாகவும் ரசனையாகவும் அரங்கேறியது.
இந்த நட்சத்திரத் திருமணத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, கோலிவுட்டின் உச்சநட்சத்திரம் சூர்யா மற்றும் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக, மணமக்களுடன் சூர்யா உற்சாகமாகப் போஸ் கொடுத்த புகைப்படங்களும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அல்லு அர்ஜுனுடன் சூர்யா உரையாடிய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன
English Summary
surya attend Allu Sirish Nainika Reddy wedding Celebrities gather Hyderabad