ஷோஷா ரீல் அவார்ட்ஸ் 2026; ஃபரிதா ஜலால், ஆஷா பரேக்கிற்கு 'ரீல் லெஜண்ட்' விருது வழங்கி கௌரவிப்பு..!
Shosha Reel Awards 2026 honors Farida Jalal and Asha Parekh with Reel Legend award
இந்திய பொழுதுபோக்குத் துறையின் மிக முக்கியமான விருது விழாவான 'நியூஸ்18 ஷோஷா ரீல் அவார்ட்ஸ் 2026' நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில், சினிமா மற்றும் டிஜிட்டல் தளங்களில் (OTT) மிகச்சிறந்த படைப்புகளைத் தந்த கலைஞர்களைக் கௌரவிப்பது இந்த விழாவின் மையக்கருவாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் ரசிகர்களின் கற்பனையைத் தூண்டிய திரைப்படங்கள், இணையத் தொடர்கள் மற்றும் அவற்றில் நடித்த கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக 'நியூஸ்18 ஷோஷா ரீல் அவார்ட்ஸ்' விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த 2016 ஆம் ஆண்டுக்கான நியூஸ்18 ஷோஷா ரீல் விருதுகள் விழாவில், இந்தியத் திரையுலகின் மூத்த நடிகைகளான ஃபரிதா ஜலால் மற்றும் ஆஷா பரேக் ஆகியோருக்கு 'ரீல் லெஜண்ட்' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வரும் ஃபரிதா ஜலால், 'ஆராதனா', 'தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே' போன்ற படங்களில் தனது எதார்த்தமான குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
பாலிவுட்டின் மிகவும் அன்பான தாய் பாத்திரங்களுக்கு அவர் ஒரு அடையாளமாகத் திகழ்கிறார். இவரை போன்று 1960 மற்றும் 70-களின் முன்னணி நட்சத்திரமான ஆஷா பரேக், தனது அபாரமான நடனம் மற்றும் நடிப்புத் திறமையால் பாலிவுட்டின் பொற்கால நாயகியாகப் போற்றப்படுகிறார்.

இவர் 'தீஸ்ரி மன்ஸில்', 'கடி பதாங்' போன்ற மாபெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளதோடு, 'தாதாசாகேப் பால்கே' விருதும் பெற்றுள்ளார். சிறந்த படைப்புகளையும் கலைஞர்களையும் கௌரவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில், திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் முன்னிலையில் இவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
English Summary
Shosha Reel Awards 2026 honors Farida Jalal and Asha Parekh with Reel Legend award