தேர்தல் முறைக்கேடு: மேற்குவங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளுக்கு நாளை மறு வாக்குப் பதிவு; தேர்தல் ஆணையம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


மேற்குவங்கம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. இதில், கடந்த 29ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தல் நடந்த வாக்குச்சாவடிகளில் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

மேற்குவங்கத்தில் மொத்தம் 77 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்ட நிலையில், அதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மக்ரஹத் பச்சிம் சட்டமன்றத் தொகுதியின் 11 வாக்குச்சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் சட்டமன்றத் தொகுதியின் 04 வாக்குச்சாவடிகளிலும் நாளை, மே 2-ஆம் தேதி, மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Election Commission orders re polling at 15 polling stations in West Bengal tomorrow


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->