'அமெரிக்காவின் கடற்படை முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணாது; அது தோல்வியில் முடியும்'; ஈரான் அதிபர் கண்டனம்..!
Iranian President Condemns US Naval Blockade as Contrary to International Law
அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தோல்வியில் முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு முரணான நடவடிக்கை என ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை பிராந்திய அமைதியை பாதிக்கும் என்றும், இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்து விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றினால் மட்டுமே ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் பெசஷ்கியான் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை, 'இராணுவ நடவடிக்கையின் நீட்டிப்பு' என்று கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அத்துடன், உலகின் அமைதிக்காக ஈரான் தொடர்ந்து சகிப்புத்தன்மையைக் காட்டி வருவதாகவும், ஆனால், அமெரிக்காவின் இந்த அடக்குமுறை அணுகுமுறையை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் இந்த முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், இது பிராந்தியத்தில் நிலையான அமைதியைக் குலைக்கும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த முற்றுகை நடவடிக்கை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய்க்கு 126 டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், ஈரான் தனது சுதந்திரத்திற்காகவே இந்த விலையைச் செலுத்துவதாகவும், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும் பெசெஷ்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Iranian President Condemns US Naval Blockade as Contrary to International Law