அஜித் குமாரின் புதிய படம் உறுதி..! ஆனால் முன்னணி நடிகர்கள் இப்படத்தில் இணைகிறார்களா...?
Ajith Kumars new film confirmed But leading actors joining film
சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் படம் பற்றி தற்போது கோலிவுட்டில் பரபரப்பு நிலவுகிறது.இந்த புதிய திட்டம் அஜித்தின் 64-வது திரைப்படம் என்பதால், ரசிகர்கள் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

படத்திற்கு தற்காலிகமாக “AK 64” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று அஜித் தாமே சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தியிருந்தார்.இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மீண்டும் அஜித்துடன் கைகோர்க்கிறார்.
இப்படம் பிரம்மாண்ட பான்–இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.விசேஷமாக, அஜித் குமாரின் சம்பளம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததாக படக்குழுவினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு பெருகியுள்ளது. அதன்படி, விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.இவர்கள் வில்லன் கதாபாத்திரங்களாகவா அல்லது முக்கிய தோற்றங்களாகவா நடிக்கிறார்கள் என்பது தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதுதொடர்பான பட அறிவிப்பு வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அஜித் ரசிகர்கள் தற்போது “AK 64” குறித்த ஒவ்வொரு அப்டேட்டையும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Ajith Kumars new film confirmed But leading actors joining film