கார்த்திக் கிட்ட பணம் போனா திரும்ப வராது! 6 இயக்குனர்களுக்கு ஒரே நேரத்தில் நாமம் போட்ட கார்த்திக்! இயக்குநர் பாரதி கண்ணன் குற்றசாட்டு!
Karthik money will never come back Karthik named 6 directors at once Director Bharathi Kannan accuses him
தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் குறித்து அதிர்ச்சிகரமான தகவலை இயக்குநர் பாரதி கண்ணன் வெளியிட்டுள்ளார்.
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனான கார்த்திக், 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் பெரும் வெற்றிபெற்று, கார்த்திக்கிற்கு கதவுகளைத் திறந்தது.
அதன்பின் அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், மேட்டுக்குடி, பூவேலி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற படங்கள் அவரை 90-களின் முன்னணி நடிகராக உயர்த்தின. அந்த காலத்தில் கார்த்திக்கின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
“அருவா வேலு”, “திருநெல்வேலி”, “ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி” உள்ளிட்ட படங்களை இயக்கிய பாரதி கண்ணன், சமீபத்திய பேட்டியில் கார்த்திக்கை குறித்த அதிர்ச்சிக் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.
அவரின் கூற்றுப்படி:“நான் கார்த்திக்கிடம் ஒரு கதையைச் சொன்னேன். அவர் ‘சூப்பர், நிச்சயம் நடிக்கிறேன்’ என்று சொல்லி அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் பிறகு மனுஷன் குடி, கும்மாளம் எல்லாம் பண்ணிட்டு படம் நடிக்கவே இல்ல!”இதையடுத்து பாரதி கண்ணன், அப்போது நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்திடம் புகார் அளித்தாராம்.
விஜயகாந்த் விஷயத்தை விசாரிக்க, கார்த்திக்கிடம் அட்வான்ஸ் கொடுத்து காத்திருந்த 6 இயக்குநர்களையும் ஒரே நேரத்தில் அழைத்தாராம். அப்போது எல்லோரிடமும் கார்த்திக் ஒரே மாதிரி நடந்து கொண்டதாக பாரதி கண்ணன் கூறியுள்ளார்.“அந்த கூட்டத்தில் கார்த்திக், தன் மேனேஜரிடம் சொல்லி ஒரு வெள்ளை பேப்பர் கொடுக்கச் சொன்னார். ‘இங்கே எல்லாருக்கும் கால்ஷீட் கொடுத்துட்டேன். கண்டிப்பா நடிக்கிறேன்’ன்னு சொன்னார். ஆனால் அந்த வெள்ளை பேப்பர் தான் இன்னும் அவரிடம் இருக்கிறது! படங்கள் எதுவும் நடிக்கவே இல்ல!” என்று அவர் தெரிவித்தார்.
இந்த வெளிப்பாடு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, “நவரச நாயகனின் நவரச ஏமாற்றம்” என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை தன் நடிப்பால் கவர்ந்த கார்த்திக், இப்போது சில நேரங்களில் மட்டுமே திரையில் தோன்றுகிறார். ஆனால் இயக்குநர் பாரதி கண்ணனின் இந்த வெளிப்பாடு, பழைய திரையுலகக் கதைகளுக்கு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.
English Summary
Karthik money will never come back Karthik named 6 directors at once Director Bharathi Kannan accuses him