பயம் வேண்டாம்… தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள்...! - மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்விப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. மாணவர்களின் எதிர்கால உயர்கல்விக்கான அடித்தளத்தை அமைக்கும் இந்தத் தேர்வு அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டைய பொதுத்தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர். இதனுடன் சுமார் 26,000 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

மொத்தத்தில் சுமார் 9 லட்சம் தேர்வர்கள் இந்த முக்கியமான கல்வித் தேர்வை எதிர்கொள்கின்றனர்.

இந்த நிலையில், தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.

உங்கள் வாழ்க்கையின் முதல் பொதுத்தேர்வை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள். அதனால் உற்சாகமும் தன்னம்பிக்கையும் நிறைந்த மனதுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள்; பயமும் பதற்றமும் தேவையில்லை.

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதையும் ஒரு சாதாரணத் தேர்வாக எண்ணி நம்பிக்கையுடன் எழுதுங்கள். உங்களின் முயற்சி கண்டிப்பாக வெற்றியாக மாறும். அனைவருக்கும் என் நல்வாழ்த்துகள்” என்று ஊக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do not fear Write with self confidence Minister Anbil Mahesh Poyyamozhi advises students


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->