நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்...! - 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விஜய் உற்சாக வாழ்த்து...! - Seithipunal
Seithipunal


தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கியமான தருணமாகக் கருதப்படும் பொதுத்தேர்வுகள் இன்று உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமையும் இந்த தேர்வு, அடுத்த மாதம் 6-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு பொதுத்தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்கு கூடுதலாக சுமார் 26 ஆயிரம் தனித்தேர்வர்களும் கலந்து கொள்கின்றனர்.

மொத்தத்தில் சுமார் 9 லட்சம் தேர்வர்கள் இந்த முக்கியமான தேர்வை எதிர்கொள்கின்றனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் வகையில் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தவெக தலைவர் விஜய் அவர்களும் தனது வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,“தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

உயர்கல்விக்கான முக்கியமான அடித்தளமாக அமையும் இந்த தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படையுங்கள். நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்!” என்று உற்சாகம் ஊட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay encouraging wishes students appearing 10th grade examinations


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->