இருள் காரணமா...? அல்லது அலட்சியமா? – கோவை வழக்கில் திமுக அரசை நெருக்கடி நிலைக்கு தள்ளிய எடப்பாடி அறிக்கை...!
Is it because of darkness or negligence Edappadi report that put DMK government crisis Coimbatore case
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது எக்ஸ் (X) வலைதளத்தில் கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தொடர்பாக கடுமையாகப் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது,"கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியபடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.20 மணிக்கு மாணவியின் நண்பர் போலீசாரை தொடர்புகொண்டார். 11.35 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தான் மாணவியை கண்டதாக தெரிவித்துள்ளனர்.

அதுவும் மாணவியே தானாக வந்து சேர்ந்ததாக கூறப்பட்டுள்ளது".இதையடுத்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளதாவது,"இரவு 11.35 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, நான்கரை மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறை என்ன செய்தது?”.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிட்டதாக பெருமை பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது காவல்துறை மாணவியை சம்பவ இடத்திலேயே நான்கரை மணி நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலைமைக்கு வெட்கத்துடன் தலை குனிய வேண்டும்.
காவல் ஆணையர் கூறியபடி, 100 போலீசாருடன் தேடுதல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவ்வளவு பெரிய படையுடன் இருந்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லையா? இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது".மேலும் காவல் ஆணையரின் முரண்பாடான விளக்கத்தை சுட்டிக்காட்டிய அவர்,“முதலில் ‘சிறிய சுவர் இருந்தது’ என்று கூறி, சில நிமிடங்களில் ‘மிகப் பெரிய சுவர் இருந்தது’ என மாற்றிக் கூறியுள்ளார்.
உண்மையில் அங்கு இருந்தது சிறிய சுவரா, பெரிய சுவரா? அதைத் தாண்டிச் சென்று தேட போலீசாரால் முடியவில்லையா? ‘இருள் சூழ்ந்த இடம் என்பதால் காண முடியவில்லை’ என்பது, திமுக அரசின் காவல்துறை திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.”அவர் கடுமையாக சாடிஎதாவது,"நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்திலேயே தேடி கண்டுபிடிக்க முடியவில்லையென திமுக அரசு ஒப்புக்கொள்கிறதா?
இவ்வாறான சூழலில், ‘குற்றவாளிகளை கைது செய்துவிட்டோம்’ என பெருமை பேசும் ஸ்டாலின் முதலில் தனது காவல்துறை தோல்விக்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.நினைவூட்டுகிறேன், காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது – காகிதத்தில் மட்டுமல்ல, பொறுப்பிலும் இருக்க வேண்டும்"இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
Is it because of darkness or negligence Edappadi report that put DMK government crisis Coimbatore case