ஆசிய தரவரிசை பட்டியலில் பின் தங்கிய தமிழக பல்கலைக்கழகங்கள்; அண்ணா பல்கலைக்கு 204வது இடம், அழகப்பா பல்கலை 393-வது இடம்..!
Tamil Nadu universities lag behind in Asian rankings
பல்கலைகளுக்கான ஆசிய தரவரிசை பட்டியலை கியூ.எஸ்., நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பல்கலைகழகங்கள் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சறுக்கல்களை சந்தித்துள்ளன. இதில், தமிழகத்தின் அண்ணா பல்கலைகழகம், 177வது இடத்தில் இருந்து, 204-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.
உலகின் சிறந்த பல்ககலைக்கழகங்களில் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி செயல்பாடுகளை, பிரிட்டன் நாட்டில் உள்ள லண்டனை சேர்ந்த கியூ.எஸ்., எனும் 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளில், பல்கலைகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன் படி, ஆசிய பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை, சீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. இதில், முதல் 100 இடங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில், ஐ.ஐ.டி., டில்லி 59-வது இடம் பிடித்தது. கடந்த ஆண்டு 44-வது இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 62-வது இடத்தில் இருந்த பெங்களூரு ஐ.ஐ.எஸ்., நடப்பாண்டு 64-வது இடம். 56-வது இடம் பிடித்திருந்த சென்னை ஐ.ஐ.டி., நடப்பாண்டு 70-வது இடம்.

இதுதவிர, மும்பை ஐ.ஐ.டி., - ஐ.ஐ.டி., கான்பூர், ஐ.ஐ.டி., கரக்பூர், டெல்லி பல்கலைகள் கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டு தரவரிசையில் பின்தங்கியுள்ளன. தமிழகத்தின் அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு 177-வது இடம் பிடித்திருந்தது. நடப்பாண்டு, 204-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 280-வது பட்டியலில் இருந்த அழகப்பா பல்கலை, நடப்பாண்டு 393-வது இடத்துக்கு சரிந்துள்ளது. தனியார் பல்கலைகளான, வி.ஐ.டி., 156; எஸ்.ஆர்.எம்., 226-வது இடங்களை பிடித்துள்ளன.
English Summary
Tamil Nadu universities lag behind in Asian rankings