சர்ச்சைக்குரிய முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்-க்கு தடை விதித்துள்ள வங்கதேசம்..!
Controversial Muslim preacher Zakir Naik banned from entering Bangladesh
பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக பேசிய சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் இவர் ஒரு மருத்துவரும் ஆவார். பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, ஆவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது மலேஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்நிலையில், வரும் நவம்பர் 28, 29 தேதிகளில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்றுவதற்காக, ஜாகிர் நாயக்கை உள்ளூர் அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, அவர் ஒரு மாதம் அந்நாட்டில் தங்கவும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டது.

முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு, டாக்காவில் உள்ள பேக்கரியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டதை அப்போது ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வரும் 2026 ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே, அந்நாட்டில் போராட்டங்கள், கலவரங்களாக வெடித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, ஜாகிர் நாயக் நுழைய வங்கதேச உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடிந்த பின் அவரது வருகை குறித்து மறுபரிசீலனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
English Summary
Controversial Muslim preacher Zakir Naik banned from entering Bangladesh