கோவை மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளிகள் மூவருக்கும் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..! - Seithipunal
Seithipunal


கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் மூவரையும் வரும், 19-ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 02-ஆம் தேதி இரவு, கோவை விமான நிலையத்தின் பின்புறம், தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், 30, அவரது சகோதரர் கார்த்திக், 21, அவர்களது துாரத்து உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா, 20, என்பது தெரியவந்தது. கடந்த 03-ஆம் தேதி இரவு, மூவரும் துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி மற்றும் அவரது நண்பரும் இதே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ( நவம்பர் 11) இரவு மருத்துவமனைக்கு வந்த ஜே.எம்., 02 நீதிபதி அப்துல் ரகுமான், மாணவியை சந்தித்து உடல்நிலையை கேட்டறிந்துள்ளார். அதன் பின், மூன்று குற்றவாளிகளை சந்தித்து, ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளார். இவர்கள் மூவரையும் வரும், 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three accused in Coimbatore student rape case remanded in judicial custody till the 19th


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?




Seithipunal
--> -->