புதிய தீர்மானம்!!! பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்தே ஆக வேண்டும்...! - காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
Pakistan must be taught lesson Congress Working Committee meeting
தெற்கு காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் கொல்லப்பட்டனா். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தற்போது நிலவுகிறது.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியின் 'செயற்குழு கூட்டம்' நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில்,முக்கிய தீர்மானமாக' பயங்கரவாதத்தை தொடர்ந்து ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதுடன் பாடம் கற்பிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இதுவே சரியான நேரம்' என்று மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
அதுமட்டுமின்றி, ''தெலுங்கானா சாதிவாரி கணக்கெடுப்பு மாடலை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு உடனடியாக தேவையான நிதியை ஒதுக்கி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒவ்வொரு கட்டத்திற்கும் தெளிவான காலக்கெடுவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு பல தரப்பிலிருந்து கலவையான விமர்சனங்களை காங்கிரஸ் எதிர் கொண்டு வருகிறது.
English Summary
Pakistan must be taught lesson Congress Working Committee meeting