பஹல்காம் தாக்குதலில் எதிரொலி: அரபிக்கடலில் போர் பயிற்சியில் இந்திய கடற்படை..!
Indian Navy in war exercises in the Arabian Sea
காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியதில், சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பெற்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய கடற்படை அரபிக்கடலில் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இன்று முதல் 07-ஆம் தேதி வரை போர் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்த போர் பயிற்சியில் போர் கப்பல்களில் இருந்து ஆயுதங்களை ஏவி தாக்குதல் நடத்தும் வகையில் பயிற்சியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் அரபிக்கடலில் இந்திய கடற்படை போர் பயிற்சியில் ஈடுபடுவது அப்பகுதியில் பரபரப்பை நிலவுகிறது.
English Summary
Indian Navy in war exercises in the Arabian Sea