பெண்களே இல்லாத 'மனிதர்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..!
The first look of the film Manithargal which has no women is released
ராம் இந்திரா என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மனிதர்கள்'. இந்த படத்தை ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து, வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக இந்த படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
புதுமுகங்களை கொண்டு யதார்த்த பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் பெண் காதபாத்திரமே கிடையாதாம். அத்துடன் இந்த படமானது ஒரு இரவில் 05 நண்பர்கள் சிக்கிக் கொண்டு அவர்கள் சந்திக்கும் பயத்தையும் பதட்டத்தையும் மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
அனிலேஸ் எல் மேத்யூ இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
English Summary
The first look of the film Manithargal which has no women is released