IT தம்பதியரின் மூடநம்பிக்கை...! அநியாயமாக பறிபோன 3 வயது குழந்தையின் உயிர்...!
superstition IT couple life 3yr old child who was unjustly taken away
IT நிபுணர்களான பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் ஆகியோரின் ஒரே மகள் 3 வயது குழந்தையான வியானாவுக்கு, கடந்தாண்டு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் குழந்தையின் உடல்நிலை மோசமாக தொடங்கியது.மேலும்,மருத்துவ சிகிச்சையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஜெயின் மதத்தின் மீது அக்குடும்பம் நம்பிக்கை வைக்கத் தொடங்கியது.இதனால் குழந்தையின் குடும்பம், இந்தூரில் உள்ள ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை,கடந்த மார்ச் 21 ம் தேதியன்று சந்தித்தது.

அப்போது அவர் இக்குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' சடங்கை வழங்கினார். இது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு மத துறவு சடங்காகும்.தற்போது சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் 'வர்ஷா ஜெயின்' தெரிவித்தார்.மேலும், 3 வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின் தெரிவிக்கையில், "எங்கள் மக்களுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை, ஆனால் குருஜி அவளுடைய நிலைமை மோசமாக இருப்பதாகக் தெரிவித்து அதை பரிந்துரைத்தார். குடும்பத்திலுள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" எனத் தெரிவித்தார்.
இதன்மூலம் மிக குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு இது தெரியவந்துள்ளது.மேலும்,வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் தெரிவித்தார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, நெட்டிசன்கள் மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.
2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று தெரிவித்து இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
superstition IT couple life 3yr old child who was unjustly taken away