மாரி செல்வராஜ் - துருவ் விக்ரமின் "பைசன்" திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ்..!
Mari Selvaraj and Dhruv Vikram Bisan film to be released on Diwali
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.
இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி மேற்கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த பைசன் படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த மார்ச் மாதம் 07ஆம் தேதி வெளியான நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 06 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
இதனை, இயக்குனரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பைசன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
English Summary
Mari Selvaraj and Dhruv Vikram Bisan film to be released on Diwali