யார் இந்த NCERT பாடத்திட்டத்தை தீர்மானித்தது...? - நடிகர் மாதவன் கேள்வி
Who decided this NCERT curriculum Actor Madhavan questions
மத்திய அரசின் புதிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சிக்கான தேசிய கவுன்சில் எனப்படும் NCERT-ன் 7-ம் வகுப்புக்கான புத்தகங்களிலிருந்து முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் தொடர்பான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தற்போது திருத்தப்பட்ட புத்தகங்களில், இந்த பாடங்கள் அடியோடு நீக்கப்பட்டுள்ளன.

மேலும் 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்திய அரசுகளான, மகதப் பேரரசு தொடங்கி சாதவாகனர்கள் ஆட்சி வரையான பாடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கூடுதலாக இந்த பகுதியில் சோழர்கள், பாண்டியர்கள் அரச வம்சங்கள் குறித்த பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
நடிகர் மாதவன்:
NCERT புத்தகத்தில் முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது பற்றி மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மாதவன் தெரிவித்ததாவது,"நான் பள்ளியில் படித்தபோது, பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி 4 பாடங்கள் இருந்தன.
ஆனால் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் பற்றி ஒரே ஒரு பாடப் பகுதி மட்டுமே இருந்தது.800 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் குறித்து விரிவான பாடங்கள் இடம்பெற்ற நிலையில், 2400 ஆண்டுகளாக ஆட்சி செய்த சோழர்கள் குறித்து ஏன் விரிவாக பாடப்புத்தகத்தில் இடம்பெறவில்லை.
இந்த பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
English Summary
Who decided this NCERT curriculum Actor Madhavan questions