குட் பேட் அக்லி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது?
good bad ugly movie ott release update
தென்னிந்திய நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படமாக வெற்றியடைந்துள்ளது.
முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்திய இந்தப் படம் இதுவரை ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படம் வருகிற 8-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது.
English Summary
good bad ugly movie ott release update