அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை; கவனமாக இருக்க வேண்டும்; இந்திய வானிலை மையம்..!
India Meteorological Department issues cyclone warning for Andaman and Nicobar Islands
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:
நேற்று காலை 08.30 மணியளவில் கிழக்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடற்கரையில் ஒரு குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாக தொடங்கியது. இந்த சூறாவளி சுழற்சி, சராசரியாக கடல் மட்டத்தில் இருந்து 5.8 கிமீ வரை நீண்டு காணப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அதன் பின் வட மேற்கில் மியான்மர்-வங்கதேச கடற்கரையில் நகரத்தொடங்கும். அப்போது வடக்கு அந்தமான் கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். அத்துடன், புயல் காற்றும் வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த புயலானது நவம்பர் 04 முதல் இந்த புயல் மேலும் தீவிரம் அடையும் என்றும் அதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றதாகவும், கடல் தொடர்ந்து சீற்றமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதற்கு அப்பால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். படகு உரிமையாளர்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நிலைமை சீராகும் வரை கடலில் பொழுது போக்கு நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
India Meteorological Department issues cyclone warning for Andaman and Nicobar Islands