மத்திய கிழக்கு மோதல் எதிரொலி…! இந்தியாவில் எரிபொருள் விலை உயருமா? - அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட் - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி தாக்குதலை கடுமையாக்கியுள்ள நிலையில், ஈரானும் தன்னுடைய பதிலடி நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் பல நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதோடு, உலக வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை கடல் வழியையும் மூடிவிட்டதாக அறிவித்துள்ளது.

மேலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்ந்த மூன்று எண்ணெய் கப்பல்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயின் சுமார் 20 சதவீதம், தினமும் ஏறத்தாழ 2 கோடி பேரல்கள், இந்த ஒரே கடல் பாதை வழியாகவே கடத்தப்படுகிறது.

குவைத், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அனைத்தும் இந்தப் பாதையை பெரிதும் நம்பியுள்ளதால், சர்வதேச சந்தையில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 80 டாலர் வரை உயர்ந்துள்ளது.இந்நிலையில், உலக சந்தையில் விலை உயர்வு ஏற்பட்டாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக உயராது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் எரிபொருள் தடையின்றி கிடைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்ப்பை மீறும் விலை ஏற்றம் ஏற்பட்டால் மட்டுமே விலையேற்றம் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Middle East conflict fuel prices increase India Important update released by government


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->