சிஜேபி போராட்டத்தில் வன்முறை; 10 எஃப்ஐஆர்கள் பதிவு: மத்திய அரசு, டெல்லி காவல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் நடந்த நாடாளுமன்றம் நோக்கிய சிஜேபி பேரணியில் கலந்து கொண்டோர் மீது அதீத பலம் பிரயோகப்படுத்தப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, காவல் துறை பதிலளிக்கமாறு நோட்டீஸ் அனுப்பியது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தகுதி தேர்வில் குளறுபடி உள்ளிட்ட காரணத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 

கடந்த 20-ஆம் தேதி, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது சிஜேபி இயக்கத்தினர் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டனர்.

அப்போது அனுமதி பெறாமல் மற்றும் தடுப்பை மீறி போட்டாக்காரர்கள் நுழைந்ததால் சிறிது தூரத்திலேயே, டெல்லி காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி மாணவர்கள், இளைஞர்கள் பலர் காயமடைந்தனர். அத்துடன் போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியதில் 04 பேருக்கு மேல் பலத்த காயமைந்ததோடு, பலர் போலீசாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்ததாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு அனைத்து சிசிடிவி காட்சிகள், பாடி கேமராக்களின் பதிவுகள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை பத்திரப்படுத்தி வைக்கும்படி வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் மத்திய அரசு,டெல்லி காவல் துறை பதிலளிக்கமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 11-க்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் 04 எஃப்ஐஆர்கள், கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் 03, மந்திர் மார்க், பாரகம்பா சாலை மற்றும் கடமைப் பாதை ஆகிய காவல் நிலையங்களில் தலா 01 எஃப்ஐஆர் என மொத்தம் 10 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

அதாவது, போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபடுதல், காவல்துறை மீது கல்வீச்சு, பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்றும் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

High Court issues notice to Central Government and Delhi Police regarding violence during CJP protest


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->