'தங்கள் நலன்களுக்காக மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயல்வது துரதிருஷ்டவசமானது;'அமைச்சர் ராஜ்நாத் சிங்..! - Seithipunal
Seithipunal


மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளதாவது;

சிலர் தங்கள் அரசியல் நலன்களுக்காக நாட்டின் மாணவர்களையும், இளைஞர்களையும் அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயல்வது மிகவும் துரதிருஷ்டவசமானது என கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரதமர் மோடியின் தலைமையில், எங்கள் அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும், அவர்களின் நலனிலும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களின் ஒவ்வொரு கவலையையும் கேட்டுத் தீர்ப்பது எங்கள் பொறுப்பு என்றும், விழிப்புணர்வுள்ள, முதிர்ச்சியான, பகுத்தறிவுள்ள இந்திய இளைஞர்கள் இத்தகைய தவறான வழிநடத்தும் முயற்சிகளைப் புரிந்துகொள்வார்கள் என்றும், அவர்கள் முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தான் முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த அமைதியற்ற செயல் இண்டியா கூட்டணியால் திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு, எந்தவொரு நபருக்கும், குறிப்பாக நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் முழு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில எதிர்க்கட்சித் தலைவர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான கொந்தளிப்பு உணர்வு மற்றும் அதிருப்தி ஆகியவை பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறது என்று கூறியதோடு, தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எந்தவொரு பிரச்சினை குறித்தும் அர்த்தமுள்ள விவாதத்தை நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்துக்கு பதிலாக வீதிகளில் பிரச்சினைகளைத் தீர்க்க எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொள்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கான இடம் நாடாளுமன்றம்தான் என்று கூறியதோடு, அங்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முழு சுதந்திரம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்க்கட்சிகள் உண்மையாகவே அக்கறை கொண்டிருந்தால், நடைபெற்று வரும் மழைக்காலக் கூட்டத்தொடரின் சுமுகமான செயல்பாட்டில் தடைகளை உருவாக்கக் கூடாது என்றும், மாறாக, நாடாளுமன்றத்தில் தாங்கள் விவாதிக்க விரும்பும் எந்தவொரு பிரச்சினையையும் விவாதித்து அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Rajnath Singh says it is unfortunate that students are being used as political tools for their own interests


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->