சர்ச்சைகளால் சூழ்ந்த பிக்பாஸ் சீசன் 9! பிக்பாஸில் ரெட் கார்டு.. இத்தனை வருடங்கள் கழித்து பிரதீப் ஆண்டனி சொன்ன தகவல்! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் தமிழ் தற்போது தனது ஒன்பதாவது சீசனில் பயணிக்கிறது. இந்த முறை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, கடந்த சில வாரங்களாக விவாதம், சண்டை, டிராமா என ரசிகர்களை கலங்க வைக்கும் அளவுக்கு பரபரப்பாக நடந்து வருகிறது.

வீட்டுக்குள் போட்டியாளர்கள் தங்கள் மனநிலைப்படி நடந்துகொள்வதால், பிக்பாஸ் குழுவும், விஜய் சேதுபதியும் சமாளிக்க முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். அதேசமயம் பிரஜின் பத்மநாபன், திவ்யா கணேஷ், அமித் பார்கவ், சாண்ட்ரா ஏமி ஆகியோர் வைல்ட்கார்டாக நுழைந்து, வீட்டை இன்னும் சூடேற்றியுள்ளனர்.

இந்த சீசன் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் ஏற்பட்ட அதிர்ச்சியும் சென்சேஷனும் வேறே லெவல் தான். அந்த சென்சேஷனுக்கு ஒரே காரணம் – பிரதீப் ஆண்டனி!

அந்த சீசனில் பிரதீப்பின் கேம் மிக வித்தியாசமானது. அவரின் தைரியமான பேச்சும், கேம் பிளானும் பலராலும் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் பெரும்பாலும் “டைட்டில் வின்னர் பிரதீப் தான்” என்று கூறி வந்தனர். ஆனால், வீட்டுக்குள் சில போட்டியாளர்கள் “அவரால் நாங்கள் பாதுகாப்பாக இல்லை” என்று கூறியதால், பிக்பாஸ் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

அந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலர் சமூக வலைதளங்களில் “பிரதீப்பை மீண்டும் வீட்டுக்குள் அனுப்புங்கள்” என்று கோரிக்கை வைத்தனர். வெளியேறிய பிறகு பிரதீப் குளுமையாகவே இருந்தார். ஆனால் மறைமுகமாக கமல்ஹாசனை குறிக்கும் வகையில் சில ட்வீட்களை போட்டது அப்போது பெரும் பேசுபொருளானது.

இப்போது அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பிரதீப் ஆண்டனி தன் மனநிலையை திறந்த மனதுடன் பகிர்ந்திருக்கிறார். விசித்திராவுடன் பேசியபோது அவர் கூறியதாவது –“பிக்பாஸில் எனக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டபோது அது எனக்கு மோசமான தருணமாக இருந்தது. ஆனால் வெளியே வந்த பிறகு நான் அதை உணரவில்லை. எனக்காக நிறைய பேர் ஃபீல் செய்தார்கள், அழுதார்கள் கூட. அதனால் என்னை விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நான் நல்லவன் என்று எல்லோரும் புரிந்துகொண்டார்கள். கமல் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அவருக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டது என்பது மட்டும் வருத்தமாக இருந்தது.”பிரதீப்பின் இந்த நேர்மையான வார்த்தைகள் தற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss Season 9 is surrounded by controversies Red card in Bigg Boss Pradeep Antony information after all these years


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->