1000 படங்களுக்கும் மேல் நடித்த 'சுறா' பட நடிகர் காலமானார்..! - Seithipunal
Seithipunal


கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன், 77 வயதில் இன்று காலமாகியுள்ளார். 1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர்.

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரதானமாக நடித்து அசத்தியவர். முக்கியமாக தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். இறுதியில் 'சாலக்குடிகாரன் சங்கதி' திரைப்படத்தில் நடித்தார். 

இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று நடிகர் புன்னப்ரா அப்பச்சன் ஆலப்புழையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Punnapra Appachan has passed away


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->