“யுவராஜ் அடித்த 6 சிக்ஸர்களே என் கேரியரை மாற்றின” – ஸ்டூவர்ட் ப்ராட் வெளிப்படை - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று, 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய சம்பவம். அந்தப் போட்டியில் ஆண்ட்ரூ ஃபிளின்டன் – யுவராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய ஓவரை நொறுக்கி, யுவராஜ் இந்த சாதனையை படைத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 உலகக் கோப்பையில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும், 12 பந்துகளில் அரை சதம் அடித்த அதிவேக சாதனையையும் அவர் பதிவு செய்தார்.

அந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற யுவராஜ் முக்கிய பங்காற்றிய நிலையில், மறுபுறம் ப்ராட் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடிவாங்கியதால், அவரது கேரியர் முடிந்துவிட்டதாகவே பலர் பேசத் தொடங்கினர். ஆனால் அதனைத் தொடர்ந்து மனம் தளராமல் போராடிய ஸ்டூவர்ட் ப்ராட், நாளடைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் இரண்டாவது அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக உயர்ந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், சமீபத்திய யூடியூப் பேட்டியில் அந்த சம்பவம் குறித்து ப்ராட் மனம் திறந்து பேசியுள்ளார். “2007ல் யுவராஜிடம் வாங்கிய அந்த அடி என் கேரியரை முற்றிலும் மாற்றியது. அது நடக்காமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அதே சம்பவம் என்னை அறிவுபூர்வமாகவும், தொழில்முறை ரீதியாகவும் வளர்த்தது” என்று அவர் கூறினார்.

அன்றைய போட்டியில் தன்னுடைய தயாரிப்பு சரியாக இல்லை என்றும், எந்த பந்தை எங்கு வீச வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் இருந்ததே அந்த 6 சிக்ஸர்களுக்குக் காரணம் என்றும் ப்ராட் ஒப்புக்கொண்டார். “அப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கான சரியான மனநிலையில் இல்லை. சில ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடியிருந்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகாத இளம் வீரனாக இருந்தேன்” என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், “ஒரு வீரர் 26 அல்லது 27 வயதில் இப்படிப்பட்ட பெரிய தோல்வியை சந்தித்தால், சிலர் விளையாட்டை விட்டே விலகிவிடுவார்கள். ஆனால் உறுதியுடன் இருந்தால், 30க்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து, அடுத்த சில ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும். அதற்கான உதாரணமே என் கேரியர்” என ப்ராட் தெரிவித்துள்ளார்.

மொத்தத்தில், யுவராஜ் சிங்கின் அந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஓவர், ஒரு பக்கம் இந்திய ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் சாதனையாகவும், மறுபக்கம் ஸ்டூவர்ட் ப்ராட் போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்கிய திருப்புமுனையாகவும் மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The 6 sixes hit by Yuvraj changed my career Stuart Broad reveals


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->