‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து – இயக்குநர் SJ சூர்யாவுக்கு பலத்த காயம்!மனுஷன் இப்போ எப்படி இருக்காரு? - Seithipunal
Seithipunal


இயக்குநர் மற்றும் நடிகராக தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான அடையாளம் பெற்ற SJ சூர்யா, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் கில்லர். இந்த படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் மட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்திலும் SJ சூர்யாவே நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படப்பிடிப்பு பணிகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், கில்லர் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த போது, சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கும் சமயத்தில் திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் SJ சூர்யாவுக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை படக்குழுவினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில், காயங்கள் தீவிரமாக இருப்பதால் இரு கால்களிலும் தையல் போடப்பட்டதாகவும், குறைந்தது 15 நாட்கள் முழுமையான ஓய்வு அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக கில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்களிடையேயும் கவலை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலர் SJ சூர்யா விரைவில் குணமடைய வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

SJ சூர்யா தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, அஜித்தை வைத்து இயக்கிய வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மாபெரும் வெற்றியை பெற்றார். அதனைத் தொடர்ந்து விஜயை வைத்து இயக்கிய குஷி படம் அவரது கேரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. விவகாரமான கதைகள், வித்தியாசமான திரைக்கதை ஆகியவற்றுக்காக அறியப்படும் SJ சூர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகமாக இருந்தது.

கில்லர் படத்தின் போஸ்டர், SJ சூர்யாவின் லுக் மற்றும் படத்தின் தலைப்பே ரசிகர்களை ஈர்த்த நிலையில், இந்த விபத்து செய்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கும் SJ சூர்யா விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பில் இணையுவார் என படக்குழு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident on the set of Killer Director SJ Surya seriously injured How is the man doing now


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->