மோடி என்னை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்...! - இந்தியாவை நேரடியாக மிரட்டிய டிரம்ப்...! - Seithipunal
Seithipunal


ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதித்து அழுத்தம் கொடுத்தவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

ரஷிய எண்ணெய் வர்த்தகம் குறித்து தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த டிரம்ப், தற்போது இந்த விவகாரத்தை மீண்டும் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியை மேலும் உயர்த்தப்போவதாகவும், அதனால் கடும் விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டனிலிருந்து புளோரிடாவுக்கு விமானத்தில் பயணித்தபோது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,“அடிப்படையில் இந்தியா என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறது. பிரதமர் மோடி ஒரு மிகச் சிறந்த மனிதர்.

ஆனால் நான் தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவர் நன்றாக அறிவார். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது அவர்களுக்கு முக்கியம். இந்தியா ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்தியா மீது விதிக்கப்படும் வரியை நாம் மிக விரைவாக உயர்த்த முடியும். அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது"என்று கடும் வார்த்தைகளில் தனது எச்சரிக்கையை வெளிப்படுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi must make me happy Trump directly threatened India


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->