டெல்லியில் இளைஞரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்: சமூக வலைதளத்தின் மூலம் பொறுப்பேற்றுள்ளதால் அதிர்ச்சி..! 
                                    
                                    
                                   A rowdy gang has claimed responsibility for the shooting death of a young man in Delhi through social media
 
                                 
                               
                                
                                      
                                            டெல்லியில் பிரபல ரவுடிக் கும்பல்களான இர்ஃபான் சீனு மற்றும் ஹசிம் பாபா கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது. இவர்களுக்குள் தங்களுக்குள் யார் ஆதிக்கம் செலுத்துவதில் ஏற்படும் போட்டியால், இரு கும்பல்களும் அடிக்கடி மோதிக் கொள்வதுதோடு, பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, திஹார் சிறையில் இர்ஃபான் சீனு அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுப்பதையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் தொடர்கதையாக வைத்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த மிஸ்பா (22) என்ற, ஹசிம் பாபா கும்பலைச் சேர்ந்த இளைஞர், கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, இர்ஃபான் சீனு கும்பல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கொலை குறித்து பதிவிட்டு, இந்த கொலைக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகிரங்க அறிவிப்பு மூலம், மீண்டும் இரு கும்பல்களுக்கும் இடையே முற்றியுள்ள மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை நடத்த தொடங்கியுள்ளது. இந்த கொலை தொடர்பாக, இர்ஃபான் சீனு கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் அப்துல்லா மற்றும் பிரின்ஸ் காசி ஆகிய இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       A rowdy gang has claimed responsibility for the shooting death of a young man in Delhi through social media