இந்த வருடமாவது துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகுமா..? இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கொடுத்த நியூவ் அப்டேட்..! - Seithipunal
Seithipunal


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "துருவநட்சத்திரம்". இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பிலேயே இருக்கிறது. இதுவரை படம் வெளியான பாடில்லை.

படத்தின் சட்டரீதியிலான சிக்கல்கள் காரணமாக ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப்போனது. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் "துருவநட்சத்திரம்" பட பிரச்சினை குறித்து புதிய அப்டேட் கொடுத்துள்ளார். 

அதன்படி இந்தப் படத்திற்கு இருந்த சட்டரீதியிலான பிரச்சினைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

"2018 ஆம் ஆண்டு இந்தப் படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும், படத்தின் பிரச்சினைகளை தீர்க்கவே அதிக காலம் கடந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எங்களுக்கு பணத்தேவை இருந்ததால், இந்தப் படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது. படத்தின் ரிலீசை ஒட்டி நாங்கள் சில சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரேயொரு பிரச்சினை தான் மீதமுள்ள பிரச்சினை வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக திரைத்துறையில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் இசைக் கச்சேரியில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கவுதம் மேனன் பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Director Gautham Vasudev Menon has given a new update regarding the release of Dhruva Natchathiram


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->