வீராணம் ஏரியில் மீண்டும் ரசாயனமா?... அச்சத்தில் பொதுமக்கள்...! - Seithipunal
Seithipunal


கடலூரில் சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் கொண்டது.இந்த வீராணம் ஏரி மூலம் காட்டுமன்னார் கோவில், கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் நடவு பருவங்களில் 54000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

மேலும் இந்த ஏரியிலிருந்து, சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.இதில் கடந்த 5 நாட்களுக்கு முன் வடவாற்றில் தண்ணீர், பச்சை நிறத்தில் வந்தது.இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்தை நிறுத்தினார்கள்.

மேலும், ஏரியின் முழு கொள்ளளவான 48.50 அடியில் தற்போது 44 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகிறது.இதனால் ஏரியில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கலாம் என விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயகத்தில் உள்ளனர்.கடந்த ஆண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறியபோது சென்னை மாசு கட்டுப்பாடு மற்றும் தண்ணீர் ஆய்வு அதிகாரிகள் ஏரியில் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர்.

அதேபோல் மீண்டும் அதிகாரிகள் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுந்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chemicals in Veeranam Lake again Public in fear


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->