படத்தின் பெயரை ஆங்கிலத்தில் வைக்க இது தான் முக்கிய காரணம்...! - சசிகுமார்
This is main reason for keeping title film English Sasikumar
நடிகரும், இயக்குனருமான 'சசிகுமார்' மற்றும் நடிகை 'சிம்ரன்' நடிப்பில் 'அபிஷன் ஜீவிந்த்' இயக்கத்தில் குடும்ப கதையில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில், இப்படத்தில் ஆங்கில பெயர் வைத்ததற்கான காரணத்தை சசிக்குமார் தற்போது பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், "தமிழ் பெயர் வைப்பதை நாங்கள் தவிர்க்கவில்லை. தற்போது படங்களை ஓடிடியில் விற்கிறோம். 3 மொழிகளில் ஓடிடியில் படத்தை விற்கும்போது ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியுள்ளது.
தமிழ் மட்டுமில்லாமல் படத்தை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுகிறது. முன்பு தமிழில் படத்தின் பெயர் வைத்தால்தான் வரிச்சலுகை உண்டு.
ஆனால் இப்போது அப்படி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
This is main reason for keeping title film English Sasikumar