அரசு மருத்துவமனையில் ஊசிபோட்ட கர்ப்பிணிகள் உள்பட 30 பேருக்கு நடுக்கம் காய்ச்சல் - சீர்காழியில் பரபரப்பு.!!
chils and fever to pregnent ladies after injuction in seerkazhi hospital
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அரசு தாய்சேய் நல மையத்தில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கர்ப்பிணி பெண்கள் வந்து செல்கின்றனர். அதன் படி வழக்கம் போல் நேற்று இரவு அங்கு சிகிச்சை பெற்ற கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு மருத்துவர்கள் ஊசி போட்டனர்.

ஆனால், சிறிது நேரத்திலேயே அவளுக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தலைமை மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாற்று மருந்து கொடுத்தனர்.
மாற்று மருந்து கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நிலை சீரான நிலையில், 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் சக நோயாளிகளின் குடும்பத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
English Summary
chils and fever to pregnent ladies after injuction in seerkazhi hospital