கேரளா திரைப்பட மேடையிலிருந்து மதுபான கடத்தலுக்கு...?-நள்ளிரவு சோதனையில் நடிகர் ஷெபிக் கைது...!
Actor Shefik arrested midnight raid smuggling liquor from Kerala film set
கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி பகுதியை சேர்ந்த அல்கு என அழைக்கப்படும் ஷெபிக், மலையாளத் திரைப்படங்களில் பல ஆண்டுகளாகச் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி வந்தவர். “ஆட்டோர்ஷா” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் “ஆக்ஷன் ஹீரோ பிஜூ” படத்தில் குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்து பார்வையாளர்களின் கவனத்தை பெற்றார்.இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற இரவு நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் எர்ணாகுளம் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் ஷெபிக் பயணம் செய்த காரையும் அவர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த சோதனையின் போது, காருக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மதுபானங்களும், ஏராளமான பீர் பாட்டில்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஷெபிக் கைது செய்யப்பட்டார்.மேலும், காரில் இருந்து 52 லிட்டர் அளவிலான இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானமும், 58 பீர் பாட்டில்கள் (மொத்தம் 37.7 லிட்டர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அவர் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர், இரவு நேரங்களில் ரகசியமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு, தேவையுடையவர்களுக்கு நேரடியாக கார் மூலம் விநியோகம் செய்து வந்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இப்படியாக மதுபானங்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யும் முயற்சியில் எர்ணாகுளம் சென்றபோதே, கலால் துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்கி கைது செய்யப்பட்டார்.
English Summary
Actor Shefik arrested midnight raid smuggling liquor from Kerala film set