மேற்காசிவில் தொடரும் பதற்றம், ஹார்மூஸ் நீரிணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்திய ட்ரம்ப்..!
Trump Consults PM Modi on Ongoing Tensions in the Middle East and the Strait of Hormuz Issue
அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக மேற்காசிய பதற்றம் நிலவுகிறது. கடல் மார்க்கத்தில் முக்கிய வழியாக பார்க்கப்படும் ஹார்முஸ் நீரிணை விவகாரம் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஹார்முஸ் விவகாரம் உள்ளிட்டவற்றுடன் உலக விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தொலைப்பேசி உரையாடல் குறித்துப் பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''எனது நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அனைத்துத் துறைகளிலும் மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களின் உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதோடு, குறிப்பாக, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் இந்த உரையாடலில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போதைய மேற்கு ஆசியாவின் பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் 'ஹார்முஸ் நீர்சந்தியை' எவ்வித இடையூறுமின்றித் திறந்து வைத்திருப்பதன் அவசியத்தையும், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Trump Consults PM Modi on Ongoing Tensions in the Middle East and the Strait of Hormuz Issue