நூரின் சுழலில் வீழ்ந்த கொல்கத்தா; 32 ரன்களில் அபார வெற்றிப்பெற்ற சென்னை அணி..!
Chennai Team Achieves a Spectacular Victory Defeating Kolkata by 32 Runs
19 வது ஐபிஎல் தொடரின் 22வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலோ இருந்த கொல்கத்தா நீயும், 09 வது இடத்தில் இருந்த சென்னை அணியும் மோதின.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 05 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராகக் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 07 ரன்களில் ஆட்டமிழந்து வழமைபோல ஏமாற்றம் அளித்தார்.
சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 03 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆயுஷ் மத்ரே களத்திற்கு வந்தது முதல், சிக்சர் பவுண்டரியை பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
ஆவர், 17 பந்துகளில் 38 ரன்கள் விளாசி மாத்ரே அணியின் ரன் விகிதத்தை அதிரடியாக உயர்த்தினார். அவருக்கு பின் சற்று ஏமாற்றம் அளித்தனர். ஒரு கட்டத்தில் 220 ரன்களுக்கு மேல் சென்னை அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொல்கத்தா கடைசி நான்கு ஓவர்களில் வீசிய பந்து வீச்சால் சென்னை அணியின ரன் குவிப்பு குறைந்தது.
அணிய சர்ப்ராஸ் 23 ரன்களும், சிவம் துபே 13 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களில் பின் ஆலென் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். சுனில் நரேன் 24 ரன்களிலும், ரஹானே 28 ரன்களிலும், ரகுவன்ஷி 27 ரன்களிலும், ரிங்கு சிங் 06 ரன்களிலும், ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
அடுத்ததாக அந்த பவல் மற்றும் ரமந்தீப் சிங் ஓரளவு நிதானமாக ஆடினர். இதில் ரமந்தீப் சிங் 35 ரங்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கொல்கத்தா அணி, 07 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை மாத்திரம் எடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை அணி சார்பில் நூர் அபாரமாக பந்து வீசி, நான்கு ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து, 03 விக்கெட்டினை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். அடுத்ததாக, காம்போஜ் 02 விக்கெட்டினையும், கலீல் மற்றும் அகில் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
English Summary
Chennai Team Achieves a Spectacular Victory Defeating Kolkata by 32 Runs