மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிப்பு; 16 முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்..!
Special Parliamentary Sessions from the 16th to the 18th regarding the increase in the number of Lok Sabha members to 850
கடந்த 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் எம்பிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு, தொகுதிகளை மீண்டும் சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போதைய மக்களவையில் அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் என்ற நிலையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்யவே தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த புதிய தொகுதி மறுசீரமைப்பு மசோதாவின்படி, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, 850 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதில் யூனியன் பிரதேசங்களின் 35 தொகுதிகளும் அடக்கம்.
முன்னதாக மகளிர் இடஒதுக்கீட்டை முன்கூட்டியே அதாவது 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதாங்க் பிரதமர் மோடி கடந்த வாரத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதினார்.
குறித்த மசோதாவை விரைவுபடுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை மசோதாவுடன், மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்படி தொகுதி மறுவரையறையில் மகளிருக்கு சுமார் 280 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
இம்மசோதாக்களை நிறைவேற்ற 16 முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
English Summary
Special Parliamentary Sessions from the 16th to the 18th regarding the increase in the number of Lok Sabha members to 850