அருணுக்கு பதவி உயர்வா? நீதித்துறையை ஏளனப்படுவதற்கு சமம்... பாஜக கண்டனம்!
BJP narayanan condemn to TVK govt dgp arun
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்தி குறிப்பில், ''சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அவர்கள் நேற்று சந்தோஷ் ஷர்மா என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறித்த தீர்ப்பில் முன்னாள் சென்னை காவல்துறை ஆணையர் அருண் அவர்கள் குறித்து முன்வைத்த கருத்துக்களையடுத்து இன்னும் தன் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்யாது இருப்பதும், மாநில அரசு அவரை பதவி உயர்வு அளித்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக நியமித்திருப்பதும் நீதித்துறையை ஏளனப்படுத்தும், பரிகசிப்பதற்கும் இணையானது.
குறிப்பாக மேற்கண்ட வழக்கில் புகார்தாரர் தே மு தி க தலைவர்களில் ஒருவரான சுதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது அரசியல்வாதிகளுக்காக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சவுக்கு சங்கர் மற்றும் வாராஹி போன்றவர்களையும் சட்ட விரோதமாக குண்டர் சட்டத்தில் அடைத்ததையும் சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையடுத்து மாநில த வெ க அரசு செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP narayanan condemn to TVK govt dgp arun