டீ குடிக்கிற மாதிரி எஞ்சின் ஆயில்..! - 22 வருஷமா இதைக் குடிச்சே வாழும் விசித்திர மனிதர்...! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பொதுமக்கள் கண்முன்னே வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை ஒருவர் சர்வசாதாரணமாக குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் காட்சிகளை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவைச் சேர்ந்த குமார் (48), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக செல்லும் வழக்கமுடைய அவர், ஓசூர் வழியாக பயணம் மேற்கொள்வதும் வழக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், நேற்று மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள டீக்கடையில் தேநீர் அருந்திய அவர், சிறிது நேரத்தில் தனது சட்டைப் பையிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்தார்.

அதில் இருந்த பழைய இன்ஜின் ஆயிலை, அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே எந்தவித தயக்கமும் இன்றி வேகமாக குடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த எதிர்பாராத சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அவரிடம் இதற்கான காரணத்தை கேட்டபோது, "கடந்த 22 ஆண்டுகளாக தினமும் பழைய இன்ஜின் ஆயிலையே குடித்து வருகிறேன்.

அதனால்தான் என்னை அனைவரும் 'ஆயில் குமார்' என்று அழைக்கிறார்கள். மெக்கானிக் கடைகளில் இருந்து பழைய ஆயிலை வாங்கிக் கொள்வேன். சாதாரண உணவுகள் எதுவும் என் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. அவை செரிமானமாகாததால் உணவை பெரும்பாலும் தவிர்த்து, அவ்வப்போது தேநீர் மட்டுமே அருந்துவேன். மற்ற நேரங்களில் இந்த ஆயில்தான் எனது உணவு" என்று கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.குமாரின் இந்த விளக்கம் அங்கிருந்தவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவர் கூறிய தகவலின் உண்மைத்தன்மை மற்றும் இதற்கான மருத்துவப் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வாகனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஜின் ஆயிலில் காரீயம் உள்ளிட்ட பல்வேறு நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதால், அதை குடிப்பது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஒருவர் நீண்டகாலமாக இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறினாலும், அது அரிய வகை உடல்நலக் கோளாறு அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கக்கூடும் என்றும், இதுபோன்ற செயல்களை யாரும் பின்பற்றவோ முயற்சிக்கவோ கூடாது என்றும் மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Engine oil like drinking tea strange man who drinking this 22 years


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->