ஏகே 64; அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகர்..!
Superstar actor to play a lead role in Ajith and Adhik Ravichandran collaboration film
அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி மீண்டும் 'ஏகே 64' இல் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏற்கனவே தளபதி விஜய்யுடன் 'ஜில்லா', சூர்யாவுடன் 'காப்பான்' படங்களில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், முதன்முறையாக அஜித்துடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகியான ஸ்ரீலீலா, கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Superstar actor to play a lead role in Ajith and Adhik Ravichandran collaboration film